ABOUT US
மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம் - ஓர் அறிமுகம்
தோற்றம்
மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம், 23.01.1955 அன்று,தமிழகத்திலிருந்து வருகை புறிந்திருந்த திருவண்ணாமலை ஆதீனகர்த்தா ஸ்ரீலஶ்ரீ குன்றக்குடி அடிகளார் அவர்காளால்தொடங்கி வைக்கப்பட்டது. இந்து சமய பிரச்சாரத்திற்கென ஓர் அமைப்பு அவசியம் என்று உணர்ந்த குன்றக்குடி அடிகளார்,தாமே அமைப்புத் தலைவராக இருந்து திருக்கூட்டத்தைத் தோற்றுவித்தார். தொடங்கப்பட்ட காலகட்டத்தில்,கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன்கோயிலை அலுவலகமாகக் கொண்டு,அக்கோயிலாரின் பெரும் ஒத்துழைப்புடன் நாடு முழுதும் திருக்கூட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள்
1) குருபூசை – அந்தர்யோகம் – கந்தசஷ்டிச் சொற்பொழிவுகள்
சமயக் குரவர்கள்,சந்தானக் குரவர்கள் உட்பட15 சைவ அருளாளர்களின் குருபூசைகள்;அந்தர்யோகங்கள்;கந்த சஷ்டி சொற்பொழிவுகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் நடத்துதல்.
2) சமய வகுப்புகள்
திருக்கூட்ட ஆசிரியர்கள் பல இடங்களில் ஆரம்ப நிலையிலான சமய வகுப்புகளை நடத்திவருகின்றனர்.சைவசித்தாந்த அடிப்படை வகுப்புகள்,சைவசித்தாந்த உயர்நிலை வகுப்புகள்,திருமுறை முற்றோதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டு அறிஞர்களும் அவ்வப்போதுஉயர்நிலை சைவசித்தாந்த வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
3) பன்னாட்டு கருத்தரங்கம்- மாநாடு
1986இல் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகச் சைவசித்தாந்தக்கருத்தரங்கை ஏற்று நடத்திய ஆறு அமைப்புகளுள் ஓர் அமைப்பாக இருந்து முக்கியப் பங்காற்றியுள்ளது;நிகழ்வறிக்கையும் கட்டுரைகளும் அடங்கிய நூலை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.
2000த்தாம் ஆண்டில் மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்த முதலாவது திருமந்திர மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் நிகழ்வறிக்கையும் கட்டுரைகளும் அடங்கிய நூலை வெளியிடுவதிலும் முக்கியப் பங்காற்றியது.
2010இல் மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்த பக்தி இலக்கிய மாநாட்டின் ஏற்பாட்டு வேலைகளிலும்,கட்டுரைப் படைப்புப் பகுதியிலும் கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டிலும்குறிப்பிடத்தக்க பங்காற்றியது.
சமய-சமுதாயத் தொண்டுகள்
நம் திருக்கூட்டத் தொண்டர்கள்,ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலும் அருள்மிகு இராமலிங்கஈஸ்வரர் ஆலயத்திலும் அருள்பாலிக்கும் அறுபத்துமூன்று நாயன்மார் திருவடிவங்களுக்கும் மாதம் ஒருமுறை நன்னீராட்டிச் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்கள்
தீபாவளி விழாவையொட்டி,அனாதை இல்லம்,பேறுகுறைந்தோர் இல்லம்,முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று அவர்களோடு கலந்துரையாடுவதோடு பலகாரங்களையும்விநியோகித்து வருகிறார்கள் திருக்கூட்ட அன்பர்கள்.
திருக்கூட்டம் கொண்டாடிய விழாக்கள்
விரிவுக் கட்டடத் திறப்பு விழா – வெள்ளிவிழா (1982)
மாதவச் சிவஞான முனிவரின்200ஆவது ஆண்டு பூர்த்தி விழா (1985)
பவள விழா –35ஆம் ஆண்டு நிறைவு விழா (1991)
மாணிக்க விழா –40ஆம் ஆண்டு நிறைவு விழா (1996)
பொன் விழா –50ஆம் ஆண்டு நிறைவு விழா (2005)
மணி விழா – 60ஆம் ஆண்டு நிறைவு விழா (2016)