தோற்றம்
மலேசியா அருள்நெறி திருக்கூட்டம், 23.01.1955 அன்று,தமிழகத்திலிருந்து வருகை புறிந்திருந்த திருவண்ணாமலை ஆதீனகர்த்தா ஸ்ரீலஶ்ரீ குன்றக்குடி அடிகளார் அவர்காளால்தொடங்கி வைக்கப்பட்டது. இந்து சமய பிரச்சாரத்திற்கென ஓர் அமைப்பு அவசியம் என்று உணர்ந்த குன்றக்குடி அடிகளார்,தாமே அமைப்புத் தலைவராக இருந்து திருக்கூட்டத்தைத் தோற்றுவித்தார். தொடங்கப்பட்ட காலகட்டத்தில்,கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன்கோயிலை அலுவலகமாகக் கொண்டு,அக்கோயிலாரின் பெரும் ஒத்துழைப்புடன் நாடு முழுதும் திருக்கூட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.