மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம்

Malaysia ArulNeri Thirukkoottam

நோக்கங்கள்

இந்து சமய நூலறிவையும்‌ குறிப்பாகச்‌ சைவ சித்தாந்த சாஸ்திர ஞானத்தையும்‌ போதிப்பதும்‌, பரப்புவதும்‌;

சமய வகுப்புகள்‌, கருத்தரங்குகள்‌, சமய மாநாடுகள்‌, பிரார்த்தனைக்‌ கூட்டங்கள்‌, சமயச்‌ சொற்பொழிவுகள்‌, விழாக்கள்‌, அந்தர்யோகங்கள்‌ ஆகியவற்றை நடத்துதல்‌;

சமயப்‌ போதனையாளர்களையும்‌ தொண்டர்களையும்‌ உருவாக்கி மக்களிடையே சமயப்பற்றையும்‌ அறிவையும்‌ பெருக்குதல்‌;

சமய நூற்கள்‌, சஞ்சிகைகள்‌, துண்டுப்பிரசுரங்கள்‌ போன்றவற்றைப்‌ பிரசுரித்து மக்களிடையே சமய உணர்வை ஏற்படுத்துதல்‌;

சமயக்‌ கல்வி நிலையங்கள்‌, அநாதை விடுதிகள்‌, மருத்துவமனைகள்‌, அங்கவீன முற்றோர்‌ இல்லங்கள்‌ ஆகியவற்றை நிறுவி நற்பணியாற்றுதல்‌

சமயக்‌ குரவர்கள்‌, சந்தான குரவர்கள்‌, அடியார்கள்‌ குருபூசைகள்‌, அகண்ட பஜனைகள்‌, பஜனை வகுப்புகள்‌ ஆகியவற்றை நடத்துதலும்‌ அவற்றில்‌ பங்கு கொள்ளுதலும்‌.