Valartha Aandror
அருள்நெறி வளர்த்த ஆன்றோர்
அம்பலத்தே ஆடும் ஆனந்தக்கூத்தனின் இன்னருள் கூட்ட1955 ஆம் ஆண்டு திருவண்ணாமலை ஆதீனகர்த்தா மலாயாவுக்கு எழுந்தருளிய பொழுது இந்நாட்டு இந்துப் பெருமக்களிடையே தோன்றிய எழுச்சியின் காரணமாக மலாயா அருள்நெறித் திருக்கூட்டம் ஆரம்பிக்கப் பெற்றது. அன்று முதல் இன்று வரை திருக்கூட்டம் பற்பல வகையில் இந்து சமயத்தை,சிறப்பாகச் சைவ சமயத்தைப் பரப்பியும் போற்றியும் வந்துள்ளது. இவ்வேளையில் திருக்கூட்டம் உருவாகவும் வளரவும்காரணமாயிருந்த ஆன்றோர்களை மனமார்ந்த நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றோம். அவர்களது ஆர்வமே நீராகவும் அயரா உழைப்பே உரமாகவும் அமைந்ததனாலேயே அருள்நெறித் திருக்கூட்டம் என்னும் இம்மரம் வளர்ந்து மலர்ந்து அருள் மணம் பரப்புகின்றது.
உயர்திரு கா. இராமநாதன் B.A.B.L அவர்கள்
(1899 - 1966)
இராமநாதபுர மாவட்டத்துப் பத்தூரில் உதித்த திரு.கா.இராமநாதன் செட்டியார் தமிழகத்திலேயே B.A,B.L. ஆகிய பட்டங்களைப் பெற்ற பின் 1947ல் மலேயாவக்கு வந்தார். இங்கு தமிழையும் சைவத்தையும் போற்றி வளர்க்கும் பணியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ஆம் ஆண்டில் மலேயாவுக்கு எழுந்தருளிய போது நமது திருக்கூட்டத்தை அமைப்பதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். பின் அதன் தலைவராக இருந்தும், பிறர் தலைமை வகிக்கத் உறுதுணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தும். பல அரிய திட்டங்களைச் செயற்படுத்தினார்.
சைவ சமய, சாத்திர அறிவைப் பரப்பும் முகமாகத் திருக்குறள், பெரியபுராணம், சிவஞான போதம் போன்ற நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கோவில்களிலும் பள்ளிகளிலும் போதித்தார். சைவ, தமிழ் அறிவு கொண்டிருந்த பிறரையும் இத்தொண்டில் ஊக்குவித்தார்.
சிறார்களுக்கும் சுங்கை பெசி ரோட் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களுக்கும் புடு சிறைச்சாலையிலும் சமய வகுப்புகள் நடத்தக் காரணமாக இருந்தார். தாமே பல இடங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தனிச் சொற்பொழிவுகள் மட்டுமன்றித் தொடர் சொற்பொழிவுகளும் ஆற்றிச் சமய உணர்வை வளர்த்தார். பல இடங்களிலும் கூட்டுப்பிரார்த்தனை, அந்தர் – யோகம், சமய – சந்தான குரவர்களின் குருபூசை, சமய மாநாடுகள், மாணவருக்கான போட்டிகள் போன்றவற்றையும் அயராது நடத்தி வந்தார். இவை இவரது சமயப் பணியில் இன்றியமையாத இடம் பெற்றிருந்தன.
மலேசியாவில் 1963 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகாநாட்டிற்கும், பிற நிகழ்ச்சிகளுக்கும் பிரபல அறிஞர்களையும் பேராசிரியர்களையும் வரவழைத்துச் சொற்பொழிவுகள் _ ஆற்றுவித்து அந்தந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பித்ததோடு மலைநாட்டின் பிற பகுதிகளுக்கும் அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவுகள் ஆற்ற வழிசெய்தார்.
மணிலாவில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவ இளைஞர் மாநாட்டிலும் மற்றும் புதுடில்லி, கல்கத்தா, சென்னை போன்ற இடங்களிலும் மலேசியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். கோலாலம்பூரிலும் பினாங்கு முதல் சிங்கப்பூர் வரை எல்லாப் பிரதான நகரங்களிலும் மட்டுமின்றி இலங்கை, இந்தியா, பாங்கொக், வியாட்னாம், ஹாங்காங் போன்ற இடங்களிலும் இவர் அந்தர் யோகங்கள் நடத்தியுள்ளார். இவரது “சிவபுராணம்” , “அருள்நெறிப் பிரார்த்தனைப் பாமாலை” ஆகிய நூல்கள் அருள் நெறித்திருக்கூட்ட வெளியீடுகளாகும். மேலும் 1959இல் அருள்நெறி அன்பர்களுடன் இந்தியாவுக்கு, மேற்கொண்ட தல யாத்திரை “மலேயா – இந்தியா யாத்திரை” என்னும் இவரது நூலின் பொருளாய் அமைந்துள்ளது.
மலேசியாவில் அருள்நெறித் திருக்கூட்டத்தின் தந்தையாகப் போற்றப்படுபவர்
திரு த. குணரத்தினம்
(1908 - 1967)
இவர் இலங்கை, யாழ்ப்பாணம், வருத்தலைவிளான் பகுதியில் பிறந்து 1924 வாக்கில் மலாயாவுக்குக் குடி வந்தார். போர்ட் கிள்ளானில் இருந்த ஹார்ப்பர் கில்ஃபிலன் என்னும் கப்பல் நிறுவனத்தில் நீண்ட காலம் தொழில் புரிந்து 1963-இல் ஓய்வு பெற்றார்.
அருள் நெறித் திருக்கூட்டத்தின் நிறுவனர் சைவப் பெரியார் திரு கா. இராமநாதனுடன் 1951 முதல் நட்புடன் இருந்து வந்த திரு குணரத்தினம், திருக்கூட்டத்தின் நிறுவன உறுப்பினரும் ஆவார். திருக்கூட்டத்தின் வளர்ச்சிக்காகவும் சைவ சமய நெறியைப் பரப்பவும் மலேசியாவின் பல பகுதிகளுக்கும் இவர் சென்று பல நகர, தோட்டக் கோயில்களில் சைவ சமய உரைகள் நிகழ்த்தியுள்ளார். இயன்ற போதெல்லாம் தமிழ், சைவம் தொடர்பான நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ளவும் தவறியதில்லை, சைவப் பெரியார்களான கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், சித்திரமுத்து அடிகளார் போன்றோருடன் அவருக்குத் தொடர்புகள் இருந்தன.
அவருடைய குடும்பத்தினர் இன்றும் திருக்கூட்டத்தோடு பாசப் பிணைப்பு கொண்டுள்ளனர்.
உயர்திரு பே. கிருஷ்ணர் அவர்கள்
(1894 - 1979)
இலங்கையில் சுழிபுரத்தில் பிறந்து மலாயாவில் தொலைத்தந்தித் தொடர்பு இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தமிழ்-சைவம் ஆகிய இரண்டிலும் பெறும் பற்றுக் கொண்டவர். அவற்றை இளைய தலைமுறையினர் அறிந்து பயன் பெற வேண்டும். என்னும் ஆவலில் சைவவேதம் 1 & 2, திருவருட்பயன் உரை ஆகிய நூல்களை வெளியிடுவதற்கான நிதியை அளித்தவர். அருள்நெறித் திருக்கூட்டத்தில் ஆரம்பகாலம் முதல் சேவையாற்றி வந்துள்ளார். உபதலைவராகவும்(1958) தலைவராகவும் (1960) பதவி. வகித்ததுடன் மலாயா- இந்தியா யாத்திரை (1959) யிலும் கலந்து கொண்டார். இந்த யாத்திரையைப் பற்றி சைவைப் பெரியார் கா.இராமநாதள் செட்டியார் எழுதிய நூலைப் பிரசுரிப்பதற்கான செலவையும் தாமே ஏற்றுக் கொண்டார். இவர் திருக்கூட்டத்தில் எற்றுச் செய்த மெய்கண்டார் குருபூசையை இவரது மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
திரு. இ. வே. கந்தையா
(1899 - 1994)
இலங்கைச் சைவப் பரம்பரையில் தோன்றிய இவர் ஆரம்பக் கல்விக்குப் பின் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆங்கிலம் பயிலச் சென்றபோது சைவப் பெரியார் சிவபாத சுந்தரனாரின் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவரது சைவச் சிந்தனை மேலும் உறுதிப்பட்டது எனலாம்.
மலாயாவிற்கு 1918ஆம் ஆண்டில் வந்து அரசாங்கப் பணியில் இருந்தவாறே தமது சமயத் தொண்டினை மேற்கொண்டார். சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் சமய வகுப்புகள், ஆலய பரிபாலன, திருப்பணிகளுக்கு உதவி போன்று பல வகையிலும் சைவம் வளர்த்தார்.
அருள்நெறித் திருக்கூட்டம் நிறுவிய பொழுதே அமைப்புக் குழு உறுப்பினர்களில் ஒருவராகச் சேர்ந்து திருக்கூட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டார். அவர் தலைவராக இருந்த 22 ஆண்டூகளில் (1968 – 1990 ) திருக்கூட்டம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. செயற்குழுவின் ஒத்துழைப்புடன் பல இடங்களில் சித்தாந்த வகுப்புகள், சமயச்சாரியர் – சந்தான குரவர்களின் குருபூசைகள், அருள் நெறிக் கூட்டுப் பிரார்த்தனைகள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தினார்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற முதலாம் அனைத்துலகச் சைவ சித்தாந்தக் கருத்தரங்கில் (1984) கலந்து கொண்டதுடன் 1986இல் அதன் தொடர்ச்சியாக இங்கு நடந்த இரண்டாம் மாநாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். மலேசியச் சைவர்களிடம் நிதி திரட்டி 1973இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்தத் துறையைத் திருக்கூட்டம் நிறுவியதிலும், 1977ஆம் ஆண்டில் அருள் நெறி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிலையான இடமாக அருள்நெறி நிலையம் அமைவதற்கும், வெள்ளி, பவள விழாக்கள் கொண்டாடியதிலும் சைவம் ஐயாவின் பங்கு கணிசமானது.
சைவம், சித்தாந்தம் தொடர்பான நூல்களை மறுபதிப்புச் செய்யக் காரணமாக இருந்த இவர் 1987, இல் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கித் தம் பெயரில் அறநிலை ஆவணம் ஒன்றினைப் பதிவு செய்தார். இதன் மூலம் பெருமன்றம் அருள்நெறித் திருக்கூட்டத்தின் ஒப்புதலுடன் அரிய சைவ நூல்கள் மறுபதிப்புச் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். இப்பணி இன்றும் தொடர்கின்றது.
பொது மக்கள் சைவம் ஐயா என அன்புடன் அழைக்கப்பட்ட இவருக்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1961,இல் சைவ சீலர் என்னும் பட்டத்தை அளித்துக் கெளரவித்தார். தொடர்ந்து, அருள்நெறித் திருக்கூட்டம் சைவபூஷணம் என்றும் சைவ சித்தாந்தப் புரவலர் என்றும், மலேசிய இந்து சங்கம் தொண்டர் மாமணி என்றும் இரண்டாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டில் தருமையாதீனம் சைவ சித்தாந்தக் கலாநிதி என்றும் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் சிவம் வளர்க்கும் செம்மல் என்றும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
உயர்திரு ௮. மாணிக்கம் அவர்கள்
இவர் அருள்நெறித் திருக்கூட்ட அங்கத்தினராக இருந்து 1961ஆம் ஆண்டில், உபதலைவராகச் செயலாற்றினார். பல்வேறு ஆலயங்களிலும், அன்பர் இல்லங்களிலும், அருள்நெறி நிலையத்திலும் திருக்கூட்டம் நடத்திய கூட்டுப் பிரார்த்தனைகளுக்குப் பல ஆண்டுகளாகத் தலைமை தாங்கிச் சிறப்பாக நடத்தி வந்தார். தண்டனை பெற்ற மாணவர்கள் இல்லங்களில் உள்ள தமிழ் மாணவர்களுக்கும், சிறைச்சாலையிலுள்ள இந்துக் கைதிகளுக்கும் தோத்திரப் பாடல்களும், சமய பாடங்களும், நீதிக் கதைகளும் போதித்து வந்த அருள்நெறி அன்பர்களுள் சைவ பூஷணம் மாணிக்கம் அவர்கள் ஒருவராவார். ஸ்ரீ தண்டாயுதபாணி, கோயிலில் சமய பாட வகுப்பும் நடத்தி வந்தார். மேற்கொண்டு, மருத்துவமனைக்கு விஜயம் செய்யும் அருள்நெறிக் குழுவில் உறுப்பினராகச் செயலாற்றி வந்தார். அவர் ஆற்றிய பணிகளை முன்னிட்டு, அருள்நெறி அவருக்கு சைவ பூஷணம் என்னும் உயரிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளது. இவருடைய அரிய சமய, சித்தாந்த நூல்கள் பல அருள்நெறி நூலகத்திற்கு நன்கொடையாக. அளிக்கப்பட்டன.
திரு. பொன் மயில்வாகனம்
(1905 - 1990)
ஸ்ரீலங்காலில் இருபாலை என்னும் பகுதியில் பிறந்து பரமேஸ்வரா கல்லூரியில் கற்று இந்நாட்டிற்கு 1926ஆம் ஆண்டு வந்தார். அவர் General Transport Companyயில் பணி புரிந்ததால் GTC மயில்வாகனம் என்று அழைக்கப் பெற்றார். இலங்கைத் தமிழர் சங்கம் இந்து சங்கம் போன்ற தமிழ், சமயச் சார்பான இயக்கங்களிலும் விளையாட்டு இயக்கங்களிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வையாற்றியுள்ளார். சமய நிகழ்ச்சிகளில் திருமுறைகள் பாடக்கூடிய இவர் அருள்நெறித் திருக்கூட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். புது அங்கத்தினரைச் சேர்த்துத் திருக்கூட்டத்தை வலுப்படுத்தப் பெரும் முயற்சிகள் எடுத்தவர். பொருளாளராக 1979 – 1983 வரை பதவியேற்றுத் தம் கடமைகளைச் செவ்வனே நடத்தியுள்ளார். இவரது நற்பணிகளைப் போற்றும் முகமாகத் திருக்கூட்டம் தனது வெள்ளி விழாலில் சைவத் தொண்டர் என்னும் பட்டத்தை அளித்துக் கெளரவித்தது.
உயர்திரு அ.வீ.அழ.மு. இராமநாதன் செட்டியார் (1907 - 1960).
தமிழ்நாடு கோட்டையூரில் தோன்றிய இவர் அங்கும் மருத்துவம்,கல்வி ஆகிய துறைகளில் தொண்டாற்றியவர். இரண்டாவது உலகப்போரின் பின் இந்தியா-மலாயா நல்லிணக்கக் குழுலில் ஒருவாரா மலாயா வந்தார். அவரே தமது பால்ய நண்பனான
திரு. கா. இராமநாதன் செட்டியார் இந்நாட்டுக்கு வரக் காரணமாய் இருந்தார் என்பர். மலாயாலில் இந்த நட்பு அவரையும் அருள்நெறில் ஈடுபடச் செய்தது. ஓராண்டு (1959)திருக்கூட்டத் தலைவராகவும் இவர் தொண்டாற்றியுள்ளார்.
இவர் தண்டாயுதபாணி தமிழ்ப் பள்ளியையும் விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியையும் அமைப்பதற்கு உதவி புரிந்தார். அருள்நெறித் திருக்கூட்ட அங்கத்தினராக இருந்து1959ஆம் ஆண்டு அக்கூட்டத்தின் தலைவராகப் பணியாற்றினார். அருள்நெறி‘சிவபுராணம்’ என்னும் நூலை வெளியிடுவதற்கு இவர் பொருள் உதவி செய்துள்ளார்.
உயர்திரு அ. ஆறுமுகம் F.C.C.A, P.A (மலேசியா) அவர்கள் .
(1907 - 2002)
ஸ்ரீ லங்கா சுழிபுரத்தில் பிறந்து அங்கேயே தமிழும் ஆங்கிலமும் கற்று மலாயாவிலும் கல்லியைத் தொடர்ந்தார். அரசாங்கப் பணியில் சேர்ந்து அதில் உயர்பதவியை அடைந்தவர். எனினும் சைவம்,தமிழ் தொடர்பான சேவைகளில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். முதன் முதலாக இந்நாட்டில் 1927ஆம் ஆண்டு மலேயன் சைவ சித்தாந்த
சங்கம் ஆரம்பித்ததில் இருந்து சைவத்தைப் பரப்புவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். செந்தூல் ஆதிஸ்வரன் கோயில் சிலாங்கூர் இலங்கைச் சைவர் சங்கம்,விவேகானந்தா தமிழ்ப்பள்ளி ஆகியவையும் இவரது உழைப்பால் பெரும் நன்மைகள் பெற்றுள்ளன.
அருள்நெறித் திருக்கூட்டத்தின் நோக்கங்கள் அவரது சிந்தனைக்கும் செயலுக்கும் உகந்ததாக இருக்கவே தமது ஒத்துழைப்பை முழுமனதுடன் நல்கியுள்ளார். இவர் சமயபாட ஆசிரியராகவும் பின்னர் நிர்வாக சபையிலும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
சைவப் பெரியார் சிவபாத சுந்தரனாரின் நூற்றாண்டு விழாவன்று (1978)தொடங்கி,திருக்கைலாய குருபரம்பரை தினம் – சைவப் பெரியார் சிவபாத சுந்தரனார் குருபூசை அறக்காப்பினை நிறுவி
அருள்நெறித் திருக்கூட்டமும் சேர்ந்து இக்குருபூசையை நடத்த வழிவகுத்துள்ளார்.
சைவ நூல்களில் இவருக்கிருந்த ஆழ்ந்த,தெளிந்த அறிவும் சேவை மனப்பான்மையும் பலரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. மலேசியா அருள்நெறித் திருக்கூட்டம் இவருக்குச் சிவநெறிச் செம்மல் (1982),
சைவ பூஷணம் (1996)ஆகிய பட்டங்களை அளித்து மகிழ்ந்தது. ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் சைவ சிகாமணி என்றும் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் (சென்னை,தமிழ்நாடு) திருமுறைப் புரவலர் (1998)
என்றும் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்துள்ளனர்.
பன்னிரு திருமுறைகளைத் தருமபுர ஆதினம் வெளியிட நிதியுதவி கோரிய போது ஆறாம் திருமுறைக்கான நிதியை வழங்கியுள்ளார். மேலும் திருத்தொண்டர் புராணம் மூலமும் சூசனமும் சிவதருமோத்தரம் ஆகிய நூல்களை வெளியிடுவதிலும் இவர் பெரும்பங்கு ஆற்றிச் சைவத் தொண்டு புரிந்துள்ளார்.
திரு. சு. பழனிவேல் பிள்ளை அவர்கள்
மலேயா அருள்நெறித் திருக்கூட்ட அமைப்பிலும்,அதன் வளர்ச்சிக்காகவும் சைவப்பெரியார் கா. இராமநாதன் பி.ஏ,பி.எல்அவர்களுடன் இணைந்து சேவையாற்றியவர். கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயில் தலைவராக இருந்த காலத்தில் அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைமையகத்தைக் கோயிலிலேயே அமைக்க இடமளித்து,சிறப்புடன் செயல்படப் பெரிதும் உதவியவர்.மலேசிய நாட்டில் சைவப் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்;ஒரு வர்த்தகர். குன்றக்குடி ஆதீன கர்த்தரால் அருள்நெறிச் செல்வர் என்ற சிறப்பு விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டவர்.
திரு. வி. பொன்னுத்துரை
1909 - 1988
தமது வயதை ஒத்த பல இலங்கைத் தமிழர்கள் போல் இவரும் ஸ்ரீலங்காவில் பிறந்து வளர்ந்து மலாயா வந்தவரே. இவர் ரயில்வேஇலாகாவில் பணியாற்றியவர். அருள்நெறித் திருக்கூட்டத்தில் அறுபதுகளில் அங்கத்தினராகச் சேர்ந்து1970 முதல்5 ஆண்டுகளும் பின்னர் (1980 – 1981)இரு ஆண்டுகளும் கெளரவ செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இக்கால கட்டம் திருக்கூட்டம் தன்னைத் திடப்படுத்தி நிலைநாட்டும் காலமாக இருந்தது. அதற்கான திட்டங்களில் செயற்குழுவுடன் இணைந்து தன்னலமற்றுச் செயலாற்றியுள்ளார்.
திரு. இ. முருகேசு அவர்கள் 1911 - 1999.
ஸ்ரீ லங்கா,வடமராட்சி எனும் பகுதியில் 1911இல் பிறந்து கல்வி பமின்ற இவர்1928ஆம் ஆண்டு மலாயா வந்து இரும்புப் பாதை(ரயில்வே)இலாகாலில் பொறியியல் பயிற்சியாளராகச் சேர்ந்தார்சமயத்துறையில் ஈடுபாடு கொண்டு கோயில்களில் சிவப்பணி ஆற்றுவதோடு சைவப் புராணங்கள் படிப்பதிலும் ஆர்வம் கொண்டார். இதனால் சைவப் பெரியார் ௧. இராமநாதன் அவர்கள் நடத்திய கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதுடன் அருள் நெறித் திருக்கூட்டம் நிறுவிய காலம் முதல் பரஞ்சோதி விநாயகர் கோவிலிலும் செந்தூல் ஆதீஸ்வரன் கோவிலிலும் சமய பாடங்களை அருள்நெறியின் சார்பாக நடத்தி வந்தார். மேலும் அருள்நெறிஆண்டுதோறும் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடத்தும் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார். இவரது அயராத நீண்ட நாளைய,தொண்டினைப் போற்றித் திருக்கூட்டம் இவருக்கு அருள்நெறிச் செல்வர் என்னும் பட்டத்தைப் பவளவிழாவில் அளித்துக் கௌரவித்தது.
திரு.க.மயில்வாகனம் அவர்கள்
(1911 - 1995)
ஸ்ரீ லங்கா அளவெட்டி வடக்கு எனும் பகுதியில் பிறந்த இவர்1926ஆம் ஆண்டு இந்நாட்டிற்கு வந்து தமது கல்வியைத் தொடர்ந்தார்.
தான் படித்த கிறிஸ்தவப் பள்ளியிலேயே ஆசிரியர் பணியும் கிட்டியது. ஆனால் மதமாற்றமும் உயர்பதவியுமா அல்லது பதவியிழப்பா என்ற நிலை வந்தபோது சைவக்கொள்கைக்காக அன்று அவருக்கு மிகவும் தேவையான பதவியை இழக்கத் துணிந்தார்இச்செயல் வீரர். பின்னர் செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும்,இறுதியில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளித் துணை அமைப்பாளராகவும் பதவிகள் ஏற்றுத் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் பெரும் பணியாற்றினார்.
அருள்நெறித் திருக்கூட்டத்தின் தொடக்க காலத்தில் அவர் பரிபாலன குழு உறுப்பினராக நற்பணி புரிந்தார். சமய,தேவார,தமிழ் வகுப்புக்கள் நடத்தியும்,குருபூசையிலும் கூட்டுப் பிரார்த்தனையிலும்,அந்தர்யோகங்களிலும்,இல்லங்களில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளிலும் கலந்து,அந்நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளார்.
பல கோயில்களிலும் சமய ஸ்தாபனங்களிலும் தமிழ்,சமய,தேவார வகுப்புகள் நடத்தி,வருங்காலத் தலைமுறைகளின் சைவ சமய அறிவை வளர்க்கப் பேருதவி செய்தார்.
அவர் ஆற்றிய திருத்தொண்டுகளைப் பாராட்டும் முறையில் அருள்நெறித் திருக்கூட்டம் அவருக்கு அருள் நெறிச் செலவர் எனும் பட்டம் அளித்துக் கெளரவித்தது.
திரு.க.சித.சிதம்பரம் செட்டியார் (1915-1991)
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தந்தையாருடன் பணியாற்றிய இவர் சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். மலேசியாவில் உலகப் போருக்கு முன் சிலகாலம் இருந்த இவர் 1947இல் திரும்பவும் வந்தார். பள்ளத்தூரைச் சேர்ந்த இவருக்குச் சைவப் பெரியார் க.இராமநாதள் அவர்களுடன் இயல்பாகவே தொடர்பு ஏற்பட்டது எனலாம். பெரியாருடன் சேர்ந்து பல கூட்டுப் பிரார்த்தளைகளையும் சமய வகுப்புகளையும் நடத்தியுள்ளார். மேலும் அப்பர் தமிழ்ப் பள்ளியில் திருக்குறள் வகுப்புகளும் மாநாடுகளும் நடத்தித் திருக்குறள் நெறிகளைப் பரப்பிவந்துள்ளார். அருள்நெறித் திருக்கூட்டத்தில் இன்றுவரை அவர் தொடங்கிய திருவள்ளுவர் குருபூசை அவரது மக்களால் நடத்தப்படுகிறது.
மத்திய சிறைச்சாலை புடு சாலையில் இருந்த காலத்தில் அங்கு விஜயம் செய்து கைதிகளுக்குச் சமயபாடம் நடத்தி வந்த அருள்நெறி அங்கத்தினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது,
உயர்திரு பெ. வேலு அவர்கள்
(1917 - 2000)
ஈழத்தில் பிறந்து கோலாலம்பூரில் தமது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய திரு பெ.வேலு அவர்கள் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்தேவஸ்தான காரிய நிர்வாக சபையில்,மாசிமக உபயத்தில் உறுப்பினராக நீண்டகாலம் செயலாற்றி வந்தவர். இவரின் அரிய முயற்சியால் இரத திருப்பணிக் குழு நிறுவப்பட்டு,இதன்வழிஇந்தியாவிலிருந்து ஆச்சாரிமார்களை வரவழைத்து இரு இரதங்கள் செப்பனிடப்பட்டுத் தரப்பட்டது.
மலாயா அருள் நெறித் திருக்கூட்டத்தில் 1935-ஆம் ஆண்டிலிருந்து அங்கத்தினராக இருந்து பல்லாண்டு காலமாகப் பரிபாலன சபை உறுப்பினராகச் செயலாற்றியும் அருள்நெறி நிகழ்ச்சிகள்எல்லாவற்றிலும் மிகு சிரத்தையுடன் அரிய தொண்டாற்றியும் வந்தவர். அன்பர்கள் அடிக்கடி கூட்டு வழிபாடுகளில் கலந்து கொண்டு சமய நெறியைப் பின்பற்றி வாழ்ந்துவர ஊக்குவிக்கும்பொருட்டு திரு. பெ. வேலு அவர்கள்1976-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி ஆண்டுதோறும் தமது இல்லத்தில் பன்முறை கூட்டுப் பிரார்த்தனைகளை நடத்தி வந்தார்.1999-இல்60-ஆவது கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நடந்தேறியது. மேற்கொண்டு,அன்பர்கள் பிரார்த்தனையில்,திருமுறைப் பாக்களைப் பாராயணம் செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு‘சைவநெறித் தேனமுது‘,‘தெய்வத் தேனமுது‘, ‘காரைக்காலம்மையார் புராணம்‘,‘சிவபுராணத் தேனமுது‘, ‘தினமும் திருப்புகழமுதம்‘, ‘அம்மையே! அப்பா!‘, ‘திருமுறைச் சிந்தனைகள்‘ஆகிய நல்ல தொகுப்பு நூல்களையும் அன்னார் வெளியிட்டு அன்பளிப்பாக வழங்கி வந்தார். அவர் கூட்டுப் பிரார்த்தனைகளைத் தனது தம்பியார்,மகள் இல்லங்களிலும் சிறப்புற நடத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் பிற அன்பர்கள் தம் இல்லங்களிலும் கூட்டு வழிபாட்டை நடத்தி வர ஊக்குவித்தும் வந்தார். அவருடைய அரும்பெருஞ் சிவப்பணியைஅன்னாருடய புதல்வர் திரு வே.விஜயரத்தினம் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பது இன்கு குறிப்பிடத்தக்கது.
1989-இல் அருள்நெறித் திருக்கூட்டம் அவர்க்கு‘அருள்நெறிச் செல்வர்‘என்னும் பட்டத்தை வழங்கியது.1994-இல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அன்னாருக்குச்‘சைவாமணி‘என்ற பட்டத்தையும் வழங்கிச்சிறப்பித்தது.
திரு. ந. அழகானந்தம் A.M.N. அவர்கள்
(1919 - 1982)
ஸ்ரீலங்காலில் ஊரெழு எனும் ஊரில் பிறந்த இவர் அங்கேயே ஆங்கிலக் கல்லியும் பெற்றார். முதலில் சிங்கப்பூரில் சில காலம் கடற்படை இலாகாவிலும்,ரயில்வே இலாகாகிலும் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் அரசாங்கப் பணியில் சேர்ந்து படிப்படியாக மேனிலையை அடைந்தார்.
இவர் செந்தூல் பரஞசோதி விநாயகர் கோலிலில் சேவை செய்த காலத்தில் சைவப் பெரியார் கா. இராமநாதன் அவர்களின் தொடர்பு
ஏற்பட்டது. அருள்நெறித் திருக்கூட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இவர் உறுப்பினராகச் சேர்ந்து பரிபாலன சபை,நிர்வாக சபை ஆகியவற்றிலும் நீண்ட காலமாகத் தொண்டாற்றியுள்ளார். சைவ
சித்தாந்தத்தைப் பலரும் அறியும் வண்ணம் ௧. சிவபாத சுந்தரனாரின்Saiva School Of Hinduismஎனும் நூலைத் திருக்கூட்டம் மறுபதிப்புச் செய்த
போது அப்பொறுப்பை இவரே ஏற்றுச் செயல்பட்டார்.
பிற தமிழ்,சமயச் சார்பான நிறுவனங்களிலும் தொண்டாற்றிய இவர் ஒரு பேச்சாளரும் ஆவார். இவர் சமுதாயத்திற்கும் தமிழுக்கும் சமயத்திற்கும்,குறிப்பாகச் சைவத்திற்கு ஆற்றிய சேவை பெரியது.
இதனைப் பாராட்டி அருள்நெறித் திருக்கூட்டம் இவருக்குத் தனது வெள்ளி விழாவில் சிவநெறிச் செல்லர் எனும் விருதினை வழங்கிக் கெளரவித்தது.
திரு பொ. அம்பலவாணர் அவர்கள்
(1920 - 1991)
இவர் அருள்நெறித் திருக்கூட்டத்தின் அங்கத்தினராக இருந்து,அங்கு நடைபெறும் குருபூசைகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து,பெரும் ஆதரவு தந்தார். அருள்நெறிக் கட்டிடப்பராமரிப்பிற்குத் துணை செய்தும் கட்டிடத்தின் உள்ளே தூய்மைப் படுத்தியும்,வெளிப்புறத்தைச் சுத்தம் செய்வதற்குரிய செலலின் ஒரு பகுதியை
ஏற்றும் பல ஆண்டுகளாகத் தொண்டு புரிந்தார். அருள்நெறியில் இறைவன் சந்நிதியைக் கட்டுவதற்கு வேண்டிய முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டார். இவர் ஆற்றிய திருப்பணிக்குத் திருக்கூட்டம் அருள்நெறித் திருக்கூட்டத் தொண்டர் என்னும் பட்டத்தை அளித்துச்
சிறப்பித்தது.
உயர்திரு முரு. பழ. இரத்தினம் செட்டியார்
(1921 – 1993)
தமிழ்நாட்டுப் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து திண்ணைப் பள்ளியில் படித்து, 11ஆம் வயதில் மலேயா வந்தவர் பத்து பாஹாட் உயர்நிலைப் பள்ளியில் சீனியர் கேப்பிரிஜ் வரை ஆங்கிலத்திலேயே படித்தார். எனினும் தமிழ் மொழி, இலக்கியம், சைவம், சித்தாந்தம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டார். சிவஞான போதச் சிற்றுரை விளக்கம் போன்ற நூல்களைப் படைத்த திரு. பொ. முத்தையா பிள்ளை அவர்களையே மானசிகமாகத் தமது சித்தாந்த குருவாகக் கொண்டார்.
இவர் 1957 ஆண்டு முதல் சைவப் பெரியார் கா.இராமநாதன் அவர்களுடன் இணைந்தும் தனிப்பட்ட முறையிலும் மலேயா / மலேசியா முழுதும் சென்று சமய வகுப்புகள் நடத்தியும் சொற்பொழிவாற்றியும் சைவசமயத்தைப் பரப்பினார்.
அருள்நெறித் திருக்கூட்டம் நடத்திய குருபூசைகள், கூட்டுப்பிராத்தனைகள், அந்தர்யோககங்கள், பிற சிறப்பு நிகழ்ச்சிகள், 136 தத்துவங்கள், திருவாசகச் சுவை, “இதோ சைவசித்தாந்தம்: தெரிந்து: கொள்ளுங்கள்” என்பனவும் அடங்கும்.
இவரது சீரிய சேவையைப் பாராட்டித் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மலேசியாவுக்கு எழுந்தருளிய போது அருள்தெறிச் செ்வர் (1959) என்றும், பின் அன்றைய சுகாதார அமைச்சர் துள் வி.தி.சம்பந்தன் அவர்கள் பூலவர் மணி (1960) என்றும், மலேசியா அருள்நெறித் திருக்கூட்டம் சித்தாந்த வித்தகர் (1962) என்றும் பட்டங்கள் அளித்துக் கெளரவித்தனர். மேலும் சென்னை ஹிந்து பரிவுச் சபை வித்யா ரத்னா (1970) என்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்ச் செம்மல் (1978) என்றும் கெளரவப் பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
இவர் உடனுக்குடன் கவிதை இயற்றும் வல்லமையும் பெற்றவர். அருள்நெறி நிகழ்ச்சி ஒன்றில். கலந்து கொண்டு திரும்புகையில் வாடகை வண்டியிலேயே இயற்றிய கலிதை பின்வருமாறு:
அறுசீர் விருத்தம் (18.4.93) அருள்நெறி தன்னைக் கண்டேன். அன்பர்தம் குழாத்தைக் கண்டேன். கருணையார் சைவசித் தாந்தக். கலாநிதி தலமை கண்டேன். தெருளுறச் சைவம் ஒங்குஞ். செந்நெறி தழைக்க அன்பு பெருகிட உரைகள் ஆற்றும் பேரருள் போற்றி போற்றி. (முரு.பழ.இரத்தினம் செட்டியார்)
தவத்திரு ஒம் சிவம் அவர்கள்
இவருடைய இயற்பெயர் கே. சிவநேயன். “ஓம் சிவம்‘என்னும் பெயர் பொது மக்கள் அன்பினால் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதே பெயர் பிற்காலத்தில் அவருடைய தீட்ஷா நாமமாகவும் அமைந்தது. இவர் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அருள்நெறி தோன்றும் முன்னே சைவப்பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்
நடத்திய சமய வகுப்பிற்குச் சென்றார். அருள்நெறித் திருக்கூட்டம். தோன்றுவதற்காகச் சைவப்பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர்களுள் இவரும் ஒருவர் ஆவார். இவர் அருள்நெறிப் பரிபாலன சபையில் ஆரம்பத்தில் உபசெயலாளராகவும்,பின்1964 முதல்1966 வரையும் பின்னர்1969 முதல்1973 வரையும் பொருளாளராகவும் பணியாற்றினார்.1970லும்1981லும் அருள்நெறி அன்பர்களை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும்
தலயாத்திரை மேற்கொண்டார்.
அருள்நெறிநிலையத்தில் பல ஆண்டுகளாகத் தங்கி இருந்து திருக்கூட்டத்திற்குப் பெருந்தொண்டு ஆற்றி வந்தார். பல கோயில்களிலும்,அன்பர் இல்லங்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தி வந்தார். ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனையுடன் அவர் சொற்பொழிவு ஆற்றிச்,
சமய வகுப்பும் நடத்தி வந்தார். பிற சமய நிறுவனங்கள் நடத்தும் நிகழ்வுகளிலும் அவர் அருளுரை அல்லது சமயச் சொற்பொழிவும்
வழங்கினார். அருள்நெறியின் கிளைகளுக்கு மாதந்தோறும் சென்று கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தி வைத்தார். அங்குள்ள மக்களை
அருள்நெறியில் ஈடுபடுத்தப் பெருந் தூண்டுகோலாக விளங்கினார். பிற மாநிலங்களில் அருள்நெறி அன்பர்கள் நடத்தும் அந்தர்யோகங்களிலும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அருள்நெறி ஏற்பாட்டில் இவர் நாட்டமுள்ள அன்பர்களுக்குச் சமய தீக்கையும்
செய்து அருளினார். அருள்நெறி அன்பர்களுக்கு சமய வழிகாட்டியாக விளங்கினார் என்பது தெளிவு. இறுதி காலத்தில் அவர் தமிழகம் சென்று அங்கேயே தங்கி 1992ல் பரிபூரணம் அடைந்தார்.
உயர்திரு. த. சரவணமுத்து
ஸ்ரீலங்காவில் அளவெட்டி என்னும் பகுதியில் பிறந்த இவர் அருணோதயா கல்லூரிமில் ஆங்கிலக் கல்வி கற்றுத் தேர்ந்தார். இந்நாட்டுக்கு,இரண்டாவது உலகப் போர் தொடங்கும் வேளையில்
வந்தார். இங்கு இரப்பர் தோட்டங்களில் நிர்வாகியாகவும் பின் ஆங்கில ஆட்சியின் கீழ் வருமானவரி அதிகாரியாகவும் பணிபுரிந்தார்.
மலாக்காவில் வருமானவரி இலாகாக் கடமைகளூடன் மாணவர்களுக்குச் சமய அறிவு புகட்டுவதிலும் ஈடுபட்டார். இவரது இச்சேவை சித்திரமுத்து அடிகளாராலும் சைவப் பெரியாராலும்
பெரிதும் பாராட்டப்பட்டது. தலைநகருக்கு மாற்றலாகி வந்த பின் செந்தூல் ஆதீஸ்வரன் கோயிலில் சமய பாட வகுப்பின் பொறுப்பை ஏற்று நடத்தினார். சைவப் பெரியார் அவரை மேல் வகுப்புகளுக்கும் பாடம் சொல்லுமாறு ஊக்குவித்தார். அருள்நெறித் திருக்கூட்டத்தில்1962, 1963ல் தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார்.
திருக்கூட்டம் ஆண்டுதோறும் சைவப் பெரியார். நினைவு நாளையொட்டி மாணவர்களுக்கான பல போட்டிகளை நடத்துகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குக் கொடுக்கும் பரிசுகளுக்கான செலவை ஓரளவு ஈடுகட்டும் வகையில் அவர் ஒரு வைப்புத்தொகையை ஏற்படுத்தியுள்ளார். இதன் வட்டி பரிசுகள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. இவரது அரிய தொண்டினைப்
போற்றித் திருக்கூட்டம் தனது வெள்ளி விழாவில் அருள்நெறிச் செல்வர் என்னும் பட்டத்தை வழங்கிக் ‘கெளரவித்துள்ளது.
உயர் திரு. இரா. சண்முக வேல் (1924 - 1996).
சிறுவயதிலிருந்தே தமிழ்ப் பணியும் சைவப்பணியும் ஆற்றிவந்த இவர் பேராக் மாகாணத்தில், குறிப்பாகத் தைப்பிங் – கோலகங்சார்
வட்டாரங்களில் அருள்நெறித் தொண்டினை மேற்கொண்டார். இந்து சங்கச் சேவையில் 12 ஆண்டுகளும் தைப்பிங் இந்து தேவாலய சபா / மாரியம்மன் கோலில் தலைவராக 34 ஆண்டுகளும் ஈடுபட்டிருந்தாலும் திருக்கூட்டம் ஆரம்பித்ததில் இருந்து (1955) அவரது இறுதிக் காலம் வரை பல இடங்களில் சமய வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். நன்கொடை உறுப்பினராகவும் ஆயுள்
உறுப்பினராகவும் இருந்து வந்த இவர் அருள்நெறி வெள்ளி விழாவில் திருபணித் தொண்டர் எனக் கௌரவிக்கப் பட்டார். தவத்திரு சித்திரமுத்து அடிகள் தமிழ்க்காவலர் என்னும் பட்டத்தை அவருக்கு அளித்துள்ளார்.
திருமதி சீதாலட்சுமி கணேசன் (1919 - 2001)
ஆரம்ப காலத்தில் திருமதி சீதாலட்சுமி கணேசன் அவர்கள் அருள்நெறி குருபூசை நாட்களில் மடப்பள்ளிச் சேவையில் உதவினார். சைவ பூஷணம் கந்தையா அவர்கள் காலத்தில் அவருடைய தூண்டுகோலின் பேரில் அம்மையார் அருள்நெறியோடு
ஈடுபடுத்திக் கொண்டு, அருள்நெறி நிலையத்திலே கணவருடன் தங்கி நிலையத்தை நல்லமுறையில் பராமரித்து வந்தார். அருள்நெறி நிகழ்ச்சி காலங்களில் அம்மையார் கோலமிட்டும், இறைவன் சந்நிதியை அலங்கரித்தும் தேனீர், உணவு பரிமாறியும், நிலயத்திற்கு வரும் அன்பர்களை நன்கு உபசரித்தும் சீரிய முறையில் பணியாற்றி வந்தார். அவரது கணவர் அவருடன் ஒத்துழைத்து பெருந்துணையாக இருந்து வந்தார்.
சைவ பூஷண ஐயா அவர்கள் நடத்தி வந்த திருமுறை, சமய வகுப்புகளில் திருமதி சீதாலட்சுமி அவர்கள் கலந்து, பயிற்சி பெற்று பின் அவர்களே அருள்நெறி நிலையத்தில் சிறார்களுக்குத் திருமுறை,
சைவ சமய பாடங்கள் நடத்தி வந்தார். தம் மாணவர்களுக்குச் சிற்றுண்டியும் தயாரித்து அவர்களை அரவணைத்து வந்தார். அவருடைய கணவர் சிவபதம் அடைந்த பின் அவர் பாரிட்
புந்தாருக்குச் சென்று தம் இறுதிக் காலத்தை கழித்தார். அம்மையார் ஆற்றிய தொண்டினை முன்னிட்டு அருள்நெறி அவர்களுக்கு அருள் நெறிச் செல்வி என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
திரு. எஸ். கே. என். வாமதேவன் அவர்கள் (1927 - 1999).
இந்தப் பெரியவர் திருக்கூட்டத்தின் அங்கத்தினராக நீண்டகாலமாக இருந்து, எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்தார். அருள்நெறிக்
கட்டடத்தின் பராமரிப்பைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்று மிகு சிரத்தையுடன் பணியாற்றினார். அதன் சுற்றுப்புறத்தைத் தூய்மைப் படுத்துவதற்குரிய செலவையும் இவர் மேற்கொண்டார். ஒரு
காலகட்டத்தில் (2 ஆண்டுகள் ) குருபூசை நாட்களில் தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொண்டு வருவதற்கு அவர் பெருந்துணைச் செய்தார். எல்லா மதமும் சம்மதமே என்ற வகையில் தம்
சுற்றத்தார்களுள் சிலர் வாழ்ந்தபோதிலும் இவர் சிவநெறியே மெய்நெறி என்ற கொள்கையில் தீவிரமாக இருந்து வாழ்ந்து வந்தவர். அவர் ஆற்றிய தொண்டை முன்னிட்டுத் திருக்கூட்டம் அவருக்கு அருள்நெறிச் செல்வர் என்னும் விருதினை அளித்துச்
சிறப்பித்தது.
திருமதி பாமகள் பாலசிங்கம்: (1937 - 1997)
மலேசியா மண்ணில் உதித்த இவர் சில ஆண்டுகள் ஸ்ரீலங்காவில் கல்லி பயின்றார். எனினும் இங்கேயே தமிழ் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். இத்துடன் தமிழும் சைவமும் இந்நாட்டில் வளர அரும் தொண்டாற்றி வந்தார்.
அருள்நெறித் திருகூட்டத்தில்1976 ஆம் ஆண்டு முதல் செயலவையில் உதவிப் பொருளாளர்,உதவிச் செயலாளர் பதவிகள் ஏற்றுத் தன் இறுதிக் காலம் வரை அருள்நெறி நிகழ்ச்சிகளில் கலந்தும் பங்காற்றியும் உதவினார். இவரது சேவை சமய சந்தான குரவர்களின் குருபூசை,பிரார்த்தனைகள்,அந்தர்யோகம்,மாணவர் நிகழ்ச்சிகள்,மடப்பள்ளி எனப் பல துறைகளையும் தழுவியதாய் இருந்தது.
சரியைத் தொண்டுடன் சொற்பொழிவுகளும் ஆற்றினார். அருள்நெறிவெள்ளி விழா (1982)பவள விழா மலர்களில் திருக்கூட்டத்தின் அறிக்கைகள்,கட்டுரைகளுடன் சைவப் பெரியார் கா.இராமநாதன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு,சைவபூஷணம்
இ.வே.கந்தையா அவர்களது நினைவு மலரில் அவரது தொண்டு பற்றிய தொகுப்பு போன்றவற்றையும் எழுதியவர் அவரே. அவரது தமிழ் – சைவ அறிவு இத்தகைய பணிகளில் திருக்கூட்டத்திற்குப் பெரிதும் உதவியது. இரண்டாவது அனைத்துலக மாநாட்டிலும்(1986)அவர் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
அவர் செய்த அரிய திருப்பணியைப் போற்றும் முறையில் அருள்நெறித் திருக்கூட்டம் தனது பவள விழாவின் போது சித்தாந்த ஆர்வலர் என்னும் பட்டத்தை அவருக்கு அளித்துக் கெளரவித்தது.
திருமதி. ருக்குமணி கிருஷ்ணசாமி
தைப்பிங் நகரைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியை. தமிழ்ப் பள்ளிகளில் பல ஆண்டுகள் திருமுறை வகுப்புகள் நடத்தி மாணவர் – இளைஞர்களிடையே தமிழும் சைவமும் மறையாது காத்த அருட்செல்லி.இவரது பணிகளைப் பாராட்டித் திருக்கூட்டம் அருள்நெறிச் செல்லி என்னும் பட்டத்தை அளித்துக் கெளரவித்துள்ளது. இவர்2002இல் இறையடி சேர்ந்தார்.
குவாந்தான் கிளை அன்பர்கள்
அருள்நெறித் திருக்கூட்டத்தின் நோக்கங்களைப் பரப்பும் வகையில் குவாந்தான் நகர் வட்டாரக் குழு அரிய தொண்டுகள் ஆற்றியுள்ளது.
வாரம் தோறும் சமய – தேவார வகுப்புகள்,கூட்டுப் பிரார்த்தனைகள் ஆகியவற்றை நடத்தி மக்களிடையே சைவ உணர்வு குன்றாமல் காத்து வந்தவர்கள் பலர்.
அவர்களில் சிலர்:
- திரு.வி. இராசையா P.J.K
இவர்1968 முதல்1999 வரை வட்டாரக் குழுத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றினார். அவரது சேவையைப் பாராட்டித் திருக்கூட்டம் பவள விழாலில் தொண்டர் மணி என்னும் விருதினை
அளித்துக் கெளரவித்தது. அவர் இன்று நம்மிடையே
இல்லை,
- திரு. வீ. சுப்பையா.
வட்டாரக் குழுவில் செயலாளராக1968முதல்2000 வரை அரிய
தொண்டாற்றிய இவருக்குத் திருக்கூட்டம் பவள விழாவில் அருள் நெறிச் செல்வர் என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. 2003ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
- திரு,எஸ். முருகன்
வட்டாரக் குழுவின் பொருளாளராக இவர்1973 முதல்1999 வரை பணியாற்றினார். இவரது தொண்டினைப் போற்றித் திருக்கூட்டம் பவள விழாவில் அருள் நெறிச் செல்வர் என்னும் பட்டத்தை வழங்கிப்பாராட்டியது. இவர்2001ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
உயர்திரு. வீ. சீனிவாசகம் அவர்கள்
ஶ்ரீலங்கா,அளவட்டியில்1908ல் பிறந்த இவர் அங்கேயே தமது இடைநிலைக் கல்லியை முடித்துக் கொண்டு மாலாயாவுக்கு வந்தார். இங்கு அரசாங்க சேவையில் திறம்பட உழைத்து மேனிலையை அடைந்தார். ஆரம்பத்தில் இருந்தே சைவ சமயத்தின் பால் பெரும் ஈடுபாடு உள்ளவராய் ஆலயங்களில் புராணப் படிப்பு போன்றவற்றில்
அக்கறையுடன் கலந்து கொண்டார். இவரது அரும் பணிகளைப் போற்றி ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொண்டர் மாமணி என்றும் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் குருசேவா ரத்னா என்றும்
மலேசியா இலங்கைச் சைவர் சங்கம் சைவபுராண சிரோமணி என்றும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். அருள்நெறித் திருக்கூட்டத்தின் நீண்ட கால உறுப்பினர்களுள் ஒருவராக விளங்கும் இவர் துணைத் தலைவராகவும் (1964)பல ஆண்டுகள்
செயலாளராகவும். (1976-1980, 1983-1988)பணியாற்றியுள்ளார். இவரது இல்லம் திருக்கூட்ட நிலையத்தின் அருகில் இருந்தது திருக்கூட்டத்திற்கு மிகவும் நன்மையாக அமைந்தது. அதன் மேற்பார்வை குருபூசைகள்,நிதி திரட்டுதல் போன்று பல துறைகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வந்துள்ளார். தீபாவளிப் பண்டிகையின் போது ஊனமுற்றோர்,முதியோர்,கைதிகள்
போன்றவர்களுக்குப் பலகாரங்கள் விநியோகம் செய்வதும் மருத்துவமனை விஜயமும் இவருக்கு மிகப் பிடித்த செயல்கள். இவற்றைத் தாமே முன்னின்று பல ஆண்டுகள் நடத்தியவர். அவரது சீரிய தலைமைத்துவத்தில்1996ஆம் ஆண்டு பவள விழா வெற்றிகரமாக நடந்தேறியது. இவரது அயராப் பணியை மெச்சித் திருக்கூட்டம் சிவநெறிச் செல்வர் என்றும் பட்டத்தை வெள்ளிவிழாவில் வழங்கிக் கெளரவித்தது. பின்னர் அருள்நெறிப்
புரவலர் என்னும் விருதையும் பெற்றுள்ளார்.
திரு.மா.சுப்பிரமணியம் அவர்கள்
ஶ்ரீ லங்காவில் சுழிபுரம் கிழக்கு எனும் பகுதியில்1916ஆம் ஆண்டு தோன்றிய இவர் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்த காலத்திலேயே சைவப்பெரியார் சிவபாதசுந்தரனாரின்
சைவக்கொள்கைகளால் கவரப்பட்டவர். இக்கொள்கைகள் இவரது வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் உறுதுணையாக இருந்தன.
மலாயாலிற்கு21 வயதில் வந்தவர் பொதுப்பணித்துறை,இரயில் இலாகா ஆகியவற்றிலும் ஆசிரியராகவும் பணியாற்றிய போதும் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டார். கோலாலம்பூரில் நிரந்தரமாகத் தங்கிய பின்னர் சைவப் பெரியார் கா.இராமநாதன் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் தேவார –
சமயபாட வகுப்புகள் நடத்தினார். அவர் வாழ்ந்த பகுதியில் கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளை முறியடித்த வீரர். பரஞ்சோதி
விநாயகர் கோயில் சமயபாட வகுப்பைப் பல ஆண்டுகளாக நடத்திவந்துள்ளார். பட்டினத்தடிகள் பால் கொண்ட ஈடுபாட்டால் இவ்வடிகளின் குருபூசை அருள்நெறித் திருக்கூட்டத்தில் நடைபெற வகை செய்துள்ளார். அருள்நெறிப் பிரார்த்தனைக் கூட்டங்களை,குறிப்பாக இல்லங்களில் நடத்தப்படுவனவற்றைச் சைவபூஷணம் அ.மாணிக்கம் அவர்களுக்குப் பின் இவரே தலைமை தாங்கி நடத்தி
வந்து அண்மையில் உடல்நிலை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். எனினும் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் இன்னும் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார். சைவசித்தாந்தத்தில் ஆழ்ந்த.
அறிவு கொண்டுள்ள இவர் சித்தாந்த வகுப்புகளையும்.
நடத்தும் ஆற்றல் பெற்றுள்ளார். இவரது அரும்பணிகளைப் போற்றி ஶ்ரீ மகாமாரியம்மன் கோலில் சைவ சிகாமணி என்றும் சைவ சித்தாந்த மன்றம் சிவத்தொண்டர் என்றும் பட்டங்கள் வழங்கியுள்ளன. இந்து சங்கம் (செந்தூல் கிளை) பொன்னாடை போர்த்திக் கெளரவித்தது.அருள்நெறித் திருக்கூட்டம் அருள்நெறிச் செல்வர்(1982)அருள்நெறிப் புரவலர் (1996)ஆகிய பட்டங்களை அளித்து மகிழ்ந்தது.
உயர்திரு. நா. சின்னதுரை அவர்கள்
இலங்கையில்1916ல் பிறந்த இவர் அருள்நெறித் திருக்கூட்டம் தோன்றுமுன்னே சைவப்பெரியார் கா. இராமநாதன் அவர்களுடன்
தொடர்பு கொண்டு,அவருடைய சமய வகுப்புகளுக்குச் சென்றும் அவர் நடத்தி வைத்த நிகழ்வுகளில் கலந்துக் கொண்டும் அவர் காட்டிய அருள்நெறியில் நின்று வாழ்ந்து வருகிறார். அவருடைய பிள்ளைகளையும் சைவப் பெரியார் வகுப்புகளில் சேர்த்து சைவநெறியில் ஈடுபட ஊக்குவித்தார். சைவப் பெரியார் இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட தலயாத்திரையிலும் கலந்துக் கொண்டார். அருள்நெறி நிறுவனம் உருவாகிய பின் திருக்கூட்டம் நடத்தி வந்த நிகழ்ச்சிகளில் கலந்து பெரும் ஆதரவு
அளித்தார். அந்தர்யோகங்களில் கருத்துப் பரிமாறும் வேளையில் இவர் அருள்நெறி இன்னும் செவ்வனே செயல்படப் பல ஆக்ககரமான கருத்துக்களை எடுத்துரைப்பார். அன்னார் அருள்நெறியின் மேம்பாட்டிற்கு ஒரு கணிசமான தொகை நிதி வழங்கினார். திருக்கூட்டத்தின்பால் என்றும் பெரும் அக்கறை கொண்டவர்களுள் இப்பெரியவரும் ஒருவர் ஆவார்.
டான் ஶ்ரீ மு. சோமசுந்தரம் P.S.M, J.M.N, K.M.N அவர்கள்
தேவகோட்டையில்1921ஆம் ஆண்டு தோன்றிய இவர் தமிழகத்திலேயே தமது பட்டப்படிப்புகளை முடித்துக்கொண்டு1948ஆம் ஆண்டு மலாயா வருமானவரி இலாகாவில் தமது
பணியை ஆரம்பித்தார். நாளடைவில் தலைமை இயக்குனராகவும் அதன் பின்2 ஆண்டுகள் நிதி அமைச்சின் வரித்துறை ஆலோசகராகவும் உயர்ந்தார்.அரசாங்கம் அளிக்கும் விருதுகள் பலவும் பெற்றுள்ளார்.அருள்நெறித் திருக்கூட்டத்தில்1968 முதல்
1989 வரை துணைத் தலைவராகவும் தொடர்ந்து2004வரை தலைவராகவும் அருந் தொண்டுகளை ஆற்றியுள்ளார். இக்காலக்கட்டத்தில் அருள்நெறியின் செயற்பாடுகள் அனைத்திலும் அவரது அயரா உழைப்பு அடிப்படைப் பலமாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. நாட்டில் இந்து சைவச் சார்பான பிற
இயக்கங்களும் இவரது ஆலோசனையையும் சேவையையும் பெற்றுள்ளன. இவரது பெயர் இந்நாட்டில் சைவசித்தாந்தத்துடன் தொடர்பு படுத்தப்படும். இத்துறையில் தமக்கிருந்த ஆழ்ந்த
அறிவினைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதை ஒரு புனிதக் கடப்பாடாகக் கொண்டு செயல்படுபவர். அருள்நெறி நிலையத்திலும் தமது இல்லத்திலும் ஶ்ரீ தண்டாயுதபாணி கோவிலிலும் சைவ சித்தாந்த வகுப்புகளை “எழில் ஞான பூசை” யாக நடத்துபவர்.
குருபூசைகள்,மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளில் சொற்பொழிவாற்றிச் சிறப்பிப்பவர். சைவசித்தாந்த அறிவைப் பரப்பும் முகமாகச் சைவசித்தாந்தக் கையேடு,சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் தருமையாதீனம் பன்னிரு திருமுறைகளை மறுபதிப்புச் செய்த பொழுது ஏழாம்
திருமுறைக்கும் சைவ சித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்ட தேவி காலோத்தர ஆகமம் எனும் நூலுக்கும் இவர் முழு நிதியுதவி வழங்கியுள்ளார்.
இவரது சைவ சித்தாந்த அறிவையும் சேவையையும் போற்றிப் பல நிறுவனங்களும் இவருக்குத் தக்க முறையில் மரியாதை செய்துள்ளன. தருமையாதீனம் சைவ சித்தாந்தக் கலாநிதி என்றும்,கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சைவ சிகாமணி
என்றும்,மலேசிய இந்து சங்கம் சங்க ரத்னா என்றும் முதலாவது மலேசியத் திருமந்திர மாநாட்டில் சைவசித்தாந்தப் பெரியார் என்றும் சென்ற22.7.2005தமிழகத்தில் சைவசித்தாந்தப் பெருமன்றம் சித்தாந்த
சரபம் என்றும் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்துள்ளன.
திருவாவடுதுறை ஆதீனம் இவரது ஆழ்ந்த நுண்ணிய சித்தாந்த அறிவையும் அரிய சேவைகளையும் கருத்தில் கொண்டு அவருக்கு2001ம் ஆண்டு பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித்து மலேசியச் சைவர்களுக்கும் பெருமையளித்தது.
திரு. சிக்கல் சிங்கார வடிவேலு அவர்கள்
கும்பகோணத்தில் 1926ல் பிறந்து மலாயாலிற்கு வந்து இங்கேயே தங்கி வாழ்ந்து வரும் இவர் இந்து சமயத்தில் குறிப்பாகச் சைவ
சமயத்திலும்,சைவ. சித்தாந்தத்திலும் மிகு ஈடுபாடு கொண்டவர். அருள்நெறியின் அங்கத்தினராக இருந்து திருக்கூட்டத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு திருக்கூட்டத்திற்குப் பெரும்
ஆதரவு தந்து வருகின்றார். இவர் அருள்நெறிப் பரிபாலன சபையில் 1996,1997ஆம் ஆண்டுகளில் துணைப் பொருளாளராகவும்,1998ல்
உறுப்பினராகவும் பணியாற்றினார். குரு பூசை,அருள்நெறி முத்திங்கள் வெளியீடு,நூல்நிலைய உப குழுக்களில் உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். இவர் அருள் நெறி நடத்தும் உயர்நிலை சித்தாந்த வகுப்புகளில் கலந்து பயிற்சி பெற்று வருகிறார். அவர் ஏற்பாட்டில் தம் இல்லத்தில் சைவ சமய வகுப்பு
இரண்டு ஆண்டு காலமாக நடைபெற்றது. தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த எண்ணத்திலும் மக்களை ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தும் நோக்கத்திலும் ஐயா அவர்கள்
திருமுறைப் பாடல்களும் சைவ சித்தாந்தக் குறிப்புகளும் கொண்ட இரு தொகுப்பு நூல்களை வெளியிட்டார். முதல் நூலை இலவசமாக
வழங்கினார். இரண்டாம் நூலின் விற்பனையிலிருந்து
வரும் நிதியை அருள்நெறி நூலகத்திற்கு வழங்கியுள்ளார். அன்னார் 1936 முதல் 1940 வரை கடப்பையிலுள்ள பரமஹம்ஸ சச்சிதானந்த
யோகீஸ்வரருடைய முதன்மைச் சீடரிடமிருந்து பதஞ்சலி அட்டாங்க யோகப் பமிற்சி பெற்று,அதன் பயனாக அவர் 1952 முதல் இது வரைக்கும் யோகப் பயிற்சியை பிறர்க்கு அளித்து வருகிறார்.
இப்பெருந்தகை அருள்நெறி வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்து வரும் பெரியோர்களுள் ஒருவர் ஆவார்.
புவான் ஸ்ரீ தெய்வானை சோமசுந்தரம்
சைவப்பெரியாரின் மகளாக1932 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த இவர் வருமானவரி இலாகாவைச் சேர்ந்த திரு.மு.சோமசுந்தரர்
அவர்களின் வாழ்க்கைத் துணைவியாய் இந்நாட்டிற்கு வந்தார். கணவர் டான் ஶ்ரீ என்னும் விருது பெற்றால் மனைவி புவான் ஶ்ரீ எனப்படுவதால் நாட்டில் பிற பெண்களும் புவான் ஶ்ரீ எனப்படுகின்றனர். ஆனால் அருள்நெறி அன்பர்களிடையே புவான் ஶ்ரீ என்றால் இவரையே குறிக்கும்.
சிறுவயதிலிருந்தே சைவத்தைப் போற்றப் பழகிவிட்ட அவர் சைவநூல்களை,சிறப்பாகத் திருமுறைகளைப் படிப்பதிலும் அருள்நெறித் தொண்டிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அருள்நெறி
நிலையத்தில் நடைபெறும் குருபூசை,அந்தர்யோகம்,சிறப்புச் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் உணவுத் தயாரிப்பு,உபசரிப்பு மேற்பார்வையிட்டும் பொறுப்புடன் பணியாற்றி வந்தார்.
அருள்நெறித் திருக்கூட்டத்தில் மகளிர் பகுதி இல்லை. ஆனால் புவான் ஶ்ரீ அவர்கள் அருள்நெறி மகளிருக்கு ஒரு தலைவி போல,தாய் போல வழிகாட்டியும்,ஆதரவளித்தும் எல்லோரையும்
அரவணைத்துத் திருக்கூட்டத்தின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டு வந்தார்.
தாம் இல்லத்தில் திருமுறைகளையும் பிற சைவ நூல்களையும் பாராயணம் செய்வதோடு அருள்நெறி நிலையத்திலும் திருமுறைகள்,திருவிளையாடற் புராணம்,கந்தபுராணம்,
திருவாதவூரடிகள் புராணம் ஆகியவற்றின் முற்றோதலை முன்னின்று நடத்தி வந்தார். அவரது அரும்பணிகளைப் போற்றும் விதமாகத் திருக்கூட்டம் அவருக்கு சிவநெறிச் செல்வி என்னும் பட்டத்தை(1991)அளித்து மகிழ்ந்தது.
திரு. சி. சிவன் செயல்.
தமிழ் நாட்டில் 1934ம் ஆண்டு தோன்றிய இவர் ரயில்வே நிர்வாகப் பகுதியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். அருள்நெறியில் தீவிர நம்பிக்கை கொண்டவர். குருபூசைகள் கூட்டுப்
பிரார்த்தனைகளில் மட்டுமன்றித் திருக்கூட்டம் நடத்தும் இதர நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துக் கொள்பவர். பல ஆண்டுகள் நிர்வாக சபை உறுப்பினராகவும் பின்னர் கணக்குப் பரிசோதகராகவும்
தொண்டாற்றியுள்ளார். இவரது சேவையைப் பாராட்டித் திருக்கூட்டம் தனது பவள விழாவில் அருள்நெறிச் செல்வர் என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. இன்றும் அருள்நெறிமின் விசுவாச அன்பர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர்.
திரு. இரா. இராமலிங்கம் அவர்கள்
தமிழ் நாட்டில்1935 ஆண்டில் பிறந்த இவர் மலேயாலில் கல்லி கற்று1957 முதல் அரசாங்க அலுவலில்34 ஆண்டுகள் ஈடுபட்டார். அந்த நாட்களிலேயே தாம் பணியாற்றிய இடங்களில்
கோவில்களுக்கும் நமது சமயக் கழகங்களுக்கும் தமது சேவையை நல்கி வந்துள்ளார். அருள்நெறித் திருக்கூட்ட அங்கத்தினராக1960இல் சேர்ந்து நிர்வாக சபையில் செயலாளராகவும் (1962,1963,1965),
துணைத் தலைவராகவும் நிர்வாக சபை உறுப்பினராகவும் பணியாற்றியதுடள் பல ஆண்டுகளாகக் கணக்குப் பரிசோதகராகவும் இருந்து வந்தார். குவந்தான்,தெமர்லோ / மெந்தகாப் வட்டாரங்களில் செயற்குழுக்கள் அமைக்க வழிவகுத்து13 ஆண்டுகள் அங்கு அருள்நெறிச் சமய வகுப்புகளும் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடத்தி
வந்தார். துணைக் குழுக்களிலும் அங்கம் வகித்து ஆவன செய்துள்ளார். திருக்கூட்டம் நடத்திய சைவசித்தாந்த வகுப்பில் கலந்து கொண்டதுடன் குருபூசைகளில் சொற்பொழிவும் ஆற்றியுள்ளார்.
இவரது சைவப் பணிகளைப் பாராட்டித் திருக்கூட்டம் இவருக்குத் தொண்டர் மணி என்னும் விருதினை அளித்துக் கெளரவித்துள்ளது.
திரு. இர. சு. வெங்கடாசலம்
தமிழ் நாட்டில்1936ஆம் ஆண்டு தோன்றிய இவர்L.I.Cஎனப்படும் இந்தியன் ஆயுள் காப்புக் கூட்டுறவு நிறுவனத்தில் தமது பணியைத் தொடங்கினார். பின் பிற ஆயுள் காப்பு நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். சிவத்திரு ஒம் சிவம் அவர்களின் தொடர்பால் அருள்நெறித் திருக்கூட்ட அங்கத்தினராகி ஐந்து ஆண்டுகள் (1970
21074).துணைச் செயலாளராகத் தமது கடமைகளைச் செவ்வனே
செய்துள்ளார். குருபூசைகள்,கூட்டுப் பிரார்தனைகள் ஆகியவற்றில் திருமுறைகள் பாடியும் சில வேளைகளில் சொற்பொழிவாற்றியும்
சிறப்பித்துள்ளார். இவரது சேவைகளைப் பாராட்டி ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சைவ சிகாமணி என்னும் விருதை அளித்துள்ளது. அருள்நெறித் திருக்கூட்டம் திருமுறைச் செல்வர் என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்துள்ளது.
திரு. சுப. நாராயணசாமி அவர்கள்
அருள்நெறித் திருக்கூட்டப்பணியில் பல ஆண்டுகள் நிர்வாகத்திலும் மற்ற நடவடிக்கைகளிலும் தீவிரப்பணியாற்றியவர்,குறிப்பாகத் தமிழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத்
துறை அமைப்பதில் திருக்கூட்டத்துடன் இணைந்து தான் மகாமாரியம்மன் கோயில் தலைவராக இருந்தபோது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கியதுடன் நிதி திரட்டுவதிலும் பெரும்பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
முடிவரை
அருள்நெறி வளர்த்த பெரியோர்களில் பலர் இன்று நம்முடன் இல்லை. அவர்களின் சந்ததியினரும் தமது தாய் நாட்டிற்கோ புலம்பெயர்ந்த சென்று விட்டதால் பலரைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பது சிரமமாக உள்ளது. எனினும் பல அன்பர்களின் உதலியால் கிடைத்த அளவில் முயன்று இப்பகுதியை.
வெளியிடுகிறோம். தொடர்ந்தது முயன்று,கிடைத்தவற்றைத் திரட்டி
முழுமையாக வெளியிட விரும்புகிறோம்.